18 மணி நேரம் கட்சிப் பணி செய்கிறேன்; முதுகில் இரும்பு கம்பியை சொருகியது போல் வலி - திருமாவளவன் பேச்சு

தொடர் பணி காரணமாக முட்டி வலியும், கால் வலியும் அதிகரித்துள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-01 09:53 IST

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டரின் இல்ல நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

“கடந்த 10 நாட்களுக்கு மேலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தேர்வுக்கான பணிகள் நடந்து வருகின்றன. எனது கண்ணில் கட்டி ஏற்பட்டுள்ளது. அதற்கு ஆண்டிபயாடிக் மருந்தை போட்டுக் கொண்டு, ஒரு நாளைக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

தொடர் பணி காரணமாக முட்டி வலியும், கால் வலியும் அதிகரித்துள்ளது. உட்கார்ந்தால் முதுகெலும்பு முதுகெலும்பாக இல்லை, கழுத்தில் இருந்து இடுப்பு வரை ஒரு இரும்பு கம்பியை சொருகி வைத்தது போல் வலிக்கிறது. இருப்பினும் தொடர்ந்து கட்சி பணிகளை செய்து வருகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்