1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது;

Update:2023-04-26 00:15 IST

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் அமராவதி புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1600 கிலோ எடையுள்ள 32 மூடைகளில் ரேஷன் அரிசி இருந்தது. தொடர்ந்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் புதுநிலைபட்டியை சேர்ந்த பாண்டி (வயது 38) என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இந்த ரேஷன் அரிசி ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியிலிருந்து கடத்தி வந்ததாக தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசி மூடைகளை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்