கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குளச்சல் அருகே இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-12-12 18:45 GMT

குளச்சல், 

குளச்சல் அருகே இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

1,010 கிேலா அரிசி

கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் அலுவலக பணியாளர்கள் குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு, மண்டைக்காடு ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அவர்கள் கொட்டில்பாடு பகுதியில் சென்ற போது அங்கு வீடுகளுக்கு இடையே சிறு சிறு மூடைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு இருந்த 1,010 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் ெசய்து உடையார்விளை அரசு குடோனில் ஒப்படைத்தனர். மேலும் அங்கு அரிசி மூடைகளை பதுக்கி வைத்த நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் கடத்தல்

இதுபோல் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் அலுவலக பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு குளச்சல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். உடனே டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து காரை சோதனை செய்த ேபாது அதில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனர். அரிசியை உடையார்விளை அரசு குடோனிலும், காரை வட்ட வழங்கல் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்