40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வேனில் 40 கிலோ கொண்ட 40 மூடைகளில் 1.6 டன் ரேஷன் அரிசி இருந்தது. வேனுடன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் வேப்பங்குளத்தை சேர்ந்த வேன் டிரைவர் மற்றும் உரிமையாளர்அய்யனார் (வயது 37), எஸ். ராமலிங்காபுரத்தை சேர்ந்த அரிசி உரிமையாளர் காளிமுத்து (36), சுமை தூக்கும் தொழிலாளி வேல்முருகன் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.