கோவையில் இருந்து பெங்களூருவுக்குலாரியில் கடத்த முயன்ற 1 டன் சந்தனக்கட்டைகள் பறிமுதல்டிரைவர் கைது
ஆத்தூர்
கோவையில் இருந்து பெங்களூருவுக்கு லாரியில் கடத்த முயன்ற1 டன் சந்தனக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சந்தனக்கட்டைகள்
கோவையில் இருந்து ஒரு லாரியில் சந்தனக்கட்டைகளை பெங்களூருவுக்கு கடத்தி செல்வதாக போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயராஜ் தலைமையில் போலீசார் போத்தனூரில் இருந்து கடத்தல் லாரியை போலீஸ் ஜீப்பில் விரட்டி சென்றனர்.
அப்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அழகாபுரம் பகுதியில் வந்தபோது போலீசார் லாரியை வழிமறித்து நிறுத்தினர். இதையடுத்து போலீசார் அதிரடியாக லாரியில் ஏறி சோதனை நடத்தினர்.
டிரைவர் கைது
அப்போது லாரியில் ரகசிய அறை அமைத்து அதற்குள் 1 டன் சந்தனக்கட்டைகளை கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது இதுதொடர்பாக போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (வயது 52) என்பதும், போத்தனூரில் இருந்து பெங்களூருவுக்கு கந்தனக்கட்டைகள் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், லாரி டிரைவரை கைது செய்தனர். பின்னர் போலீசார், சந்தனக்கட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். சந்தனக்கட்டை கடத்தி சென்ற லாரியை விரட்டி சென்று பிடித்து பறிமுதல் செய்த போத்தனூர் போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.