காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் முன்பு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலையில் மத்திய பா.ஜ.க. அரசின் விலைவாசி உயர்வு மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்து சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் பால் பாக்கெட் வைத்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்செந்தூர் வட்டார தலைவர் சற்குரு தலைமை தாங்கினார். இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.