பந்தலூர்
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்த மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில், பந்தலூர் பஜாரில் நெல்லியாளம் நகர கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.