காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் ராகுல் காந்தி கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update:2023-03-24 00:15 IST

பொள்ளாச்சி

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்