கேரளாவில் பறவைக் காய்ச்சல்; பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் - தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;

Update:2025-12-26 13:26 IST

சென்னை,

கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய கோழி மற்றும் மாட்டிறைச்சி வண்டிகளில் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருவதாகவும், 13 எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை எனவும், பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு தற்போது வரை பறவைக் காய்ச்சல் பரவவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே சமயம், 3 முதல் 5 நாட்கள் வரையிலான தொடர் காய்ச்சல், சுவாசக் கோளாறு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளை உடையவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ரத்தப் பரிசோதனையில் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாத்துறை தெரிவித்துள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்