ரிஷிவந்தியத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி: ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
ரிஷிவந்தியத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.;
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் காலனி மாதா கோவில் பின்புறம் உள்ள தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நின்றது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டு்ம் என அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஆய்வின்போது மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.