அரசு அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

அரசு அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

Update: 2022-09-22 19:04 GMT

காரியாபட்டி

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர் சங்கத்தின் கூட்டுப் போராட்ட குழு சார்பில் நேற்று 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. திமுக தேர்தல் வாக்குறுதிப் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை விடுவிக்க வேண்டும், கிராம உதவியாளர்கள் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 11 ஆயிரத்து 167 அரசு ஊழியர்களில் 920 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 80 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல் பஞ்சாயத்து அலுவலகங்களில் பணியாற்றும் பஞ்சாயத்து செயலர்கள் 90 சதவீதம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நரிக்குடி, காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒருநாள் விடுப்புடன் கூடிய அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், பங்களிப்பு ஓய்வூதியத்தை கைவிடுதல் என்பது போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால் யூனியன் அலுவலகத்தில் வழக்கமான அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்