கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்

பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டு தொகையில் கையாடல் செய்ததாக கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-06-22 19:30 GMT

கூட்டுறவு சங்க செயலாளர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இதன் செயலாளராக செல்வி கோகிலாம்பாள் என்பவர் பணியாற்றி வந்தார். பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டு தொகையை கையாடல் செய்ததாக கூறி இவரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க தலைவர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:-

சங்கத்தின் செயலாளர் செல்விகோகிலாம்பாள் சங்கத்தின் உறுப்பினர் காந்திமதி என்பவருக்கு வரப்பெற்ற 2018-19-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகை ரூ.40 ஆயிரத்து 898-ஐ அவருடைய சேமிப்பு கணக்கில் மட்டும் வரவு வைத்து உரியவருக்கு வழங்காமல், ஆனால் வழங்கியது போன்று போலியான பணம் எடுக்கும் சீட்டு தயார் செய்து அதில் போலியாக கையொப்பம் இட்டு நிதி கையாடல் செய்துள்ளார்.

பணியிடை நீக்கம்

இவ்வாறு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டு தொகையை காந்திமதிக்கு வழங்காமல் நிதி கையாடல் செய்த சங்கத்தின் செயலாளர் செல்வி கோகிலாம்பாளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்