தேனியில் கூட்டுறவு வார விழா

தேனியில் கூட்டுறவு வார விழாவை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.;

Update:2022-11-15 00:15 IST

தேனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அங்கு அவர் மரக்கன்று நடவு செய்து வார விழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன், சரவணக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்