சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தாா்.

Update: 2023-06-07 21:41 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தாா்.

பாதுகாப்பு மையம்

கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரன் கோவிலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உலோக திருமேனி பாதுகாப்பு மையம் கட்டப்பட்டது. தற்போது இந்த பாதுகாப்பு மையத்தில் பல்வேறு கோவில்களில் திருடப்பட்டு மீட்கப்பட்ட சிலைகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு இந்த பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் போலீசார்

இதில் நுாற்றுக்கணக்கான சாமி சிலைகள் உள்ளன. இந்த பாதுகாப்பு மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவு பகலாக கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சிலைகள் பாதுகாப்பு மையத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களை ஆய்வு செய்த சக்தி கணேஷ், 24 மணி நேரமும் பாதுகாப்பு மையத்துக்கு கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் மற்றும் போலீசார் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்