கோவையில் கொரோனா பரிசோதனை அதிகரிப்பு

தொற்று பரவலை தடுக்க கோவையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-03-20 00:15 IST

கோவை

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. கோவையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10-ஐ தாண்டி வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்க மீண்டும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தியும் உள்ளது. மேலும் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவலும் அதிகரித்து வருவதால், அந்த காய்ச்சல்தான் கொரோனாவாக மாறுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- மாவட்டத்தில் தினமும் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதன் எண்ணிக்கை 600 ஆக உயர்த்தி உள்ளோம். அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறோம். கோவை மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுவிட்டனர். இருந்தாலும் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்