நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
குன்னம் அருகே நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.;
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள லெப்பைக்குடிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொடக்க விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜம்மாள் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் பாரதி வரவேற்றார். முகாமில் முதுநிலை இயற்பியல் ஆசிரியர் கண்ணதாசன் முகாம் குறித்து விளக்கி பேசினார். முகாமில் சுகாதார பணிகள், பொது சுகாதார விழிப்புணர்வு, மரக்கன்று நடுதல், பனை விதைகள் நடுதல், பள்ளி வளாக தூய்மை, ஆலய உழவாரப் பணி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவை நடைபெற உள்ளது. முடிவில் உதவி திட்ட அலுவலர் அக்ரி மாதவன் நன்றி கூறினார்.