ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள பொன்குறிச்சி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் வீரமணி. அவரது மனைவி ஸ்ரீதேவி. அவர்களுடைய மகன் கவுதம் (வயது 16). வீரமணி நேற்று வீட்டின் அருகே பசு மாட்டை கட்டியிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேலே சென்ற மின்சார வயர் அறுந்து மாடு மீது விழுந்தது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே செத்தது. இதற்கிடையில் வேகமாக சென்று மாட்டை தொட்ட கவுதம் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் லேசான காயம் அடைந்த சிறுவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றான். பசுமாடு செத்தது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி விசாரணை நடத்தினார்.