மின்சாரம் தாக்கி மாடு பலி

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி மாடு பலியானது.;

Update:2023-08-31 23:37 IST

ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பெரிய வரிகம் பகுதியில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்தன. இந்த நிலையில் பசு மாடு ஒன்று அந்த வழியாக சென்றது. அப்போது அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த மாட்டை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மின்சாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பிகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்