வணிகர்களுக்கு கடன் வழங்கும் முகாம்

அம்பையில் வணிகர்களுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.;

Update:2023-09-08 01:01 IST

அம்பை:

அம்பை நகராட்சி சார்பில் நகர்ப்புறங்களில் வசிக்கும் சாலையோர சிறு வணிகர்களுக்கான கடன் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகர பாண்டியன் தலைமை தாங்கி, 80-க்கும் மேற்பட்ட வணிகர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான கடன் ஆணையை வழங்கினார்.

வங்கி மேலாளர்கள் சிவராமகிருஷ்ணன், அமிர்த ரேகா, ஸ்ரீராம்ஜிகுமார், நகராட்சி மேலாளர் பிரேமா, நகரமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர், நகரசபை துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்