பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update:2022-07-15 09:40 IST

சென்னை,

கொரோனா நோய்த் தொற்று கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கால் பதித்து, இன்றளவும் பாதிப்பு இருந்து வருகிறது. அதிலும் தமிழகத்தில் குறைந்து வந்த நோய்த் தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் வீரியம் கொண்டு பரவி வருகிறது.

கொரோனா தாக்கத்தில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முககவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, அதனை அனைவரும் கடைப்பிடிக்க அறிவுறுத்தியும் வருகிறது.

இந்த நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் நாசர் தனிமைப்பட்டுத்திக் கொண்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்