காற்றுடன் கனமழைக்கு பயிர்கள் சேதம்

Update:2023-03-25 01:15 IST

கெங்கவல்லி:-

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் சோளம், வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு மற்றும் நெல்களை பயிர் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

இந்த மழையால் சோள பயிர்கள், வாழை, மரவள்ளிக்கிழங்கு மற்றும் நெற் பயிர்கள் சேதமடைந்தன. இதனால் பலத்த நஷ்டம் அடைந்த விவசாயிகள் தங்களுக்கு நிலத்துக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்