மூவர்ண விளக்குகளால் சாத்தனூர் அணை அலங்கரிப்பு
மூவர்ண விளக்குகளால் சாத்தனூர் அணை அலங்கரிக்கப்பட்டு ஒளிர்கிறது.;
தண்டராம்பட்டு
மூவர்ண விளக்குகளால் சாத்தனூர் அணை அலங்கரிக்கப்பட்டு ஒளிர்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119அடி உயரம் கொண்டது இதில் 117 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்த அணையை பார்ப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்த தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அணையில் உள்ள 9 ஷட்டர்களும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஒளிரச் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் சாத்தனூர் அணைக்குள் இருப்பதற்கு அனுமதி இல்லாததால் இந்த ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணிகளால் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.