குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி அருகே தேசியக்கொடியால் போர் நினைவு சின்னம் அலங்கரிப்பு
குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி அருகே தேசியக்கொடியால் போர் நினைவு சின்னம் அலங்கரிப்பு;
குன்னூர்
1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி பிரிட்டீஷ் பேரரசின் 200 ஆண்டுகால அடக்குமுறையிலிருந்து இந்தியா அதிகார பூர்வமாக சுதந்திரம் பெற்றது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி அருகே போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட போர் நினைவு தூண் மூவர்ண தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.