வாகனம் மோதி புள்ளிமான் சாவு

ஆலங்குளம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் செத்தது.;

Update:2023-02-09 00:15 IST

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் ஆண்டிபட்டி விலக்கு அருகில் 2½ வயது பெண் புள்ளிமான் சாலையை கடக்க முயன்றது. அப்போது தென்காசி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் புள்ளிமான் உயிரிழந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் வந்து மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அருகில் உள்ள ராமர் கோவில் வனப்பகுதியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மானை புதைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்