திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
வெண்ணந்தூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
வெண்ணந்தூர்
திராவிடர் கழகம் சார்பில் அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து வெண்ணந்தூர் பகுதியில் பெரியார் பிறந்த நாளையொட்டி போஸ்டர் ஒட்டப்பட்டது. அதன் மேல் பா.ஜ.க.வினர் போஸ்டர் ஒட்டினார்கள். இதனை கண்டித்து திராவிடர் கழகம் ஒன்றிய அமைப்பாளர் செல்வகுமார் தலைமையில் வெண்ணந்தூர் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெரியார் போஸ்டர் மீது போஸ்டர் ஒட்டிய பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி கோரிக்கை வைத்தனர். இதில் திராவிடர் கழகம் வெண்ணந்தூர் நகர செயலாளர் அண்ணாதுரை, கிளைச் செயலாளர் அன்பழகன், தலைமை கழக காப்பாளர் சுரேஷ், வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் நடராஜன், ராசிபுரம் திராவிடர் விடுதலைக் கழகம் நகரச் செயலாளர் பிடல் சேகுவாரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.