ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;

Update:2022-06-23 16:56 IST

குன்னூர்

மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சில இடங்களில் வன்முறைகளும் வெடித்தன. இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குன்னூர் வி.பி.தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு குன்னூர் தாலுகா செயலாளர் மனோஜ் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் வினோத், சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர் சங்க செயலாளர் யோகேஸ்வரன், குன்னூர் நகர செயலாளர் ஜாவித் மற்றும் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்