கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சுரண்டை அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-02-01 18:45 GMT

சுரண்டை:

தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மவுன மொழி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் நலச்சங்க சுரண்டை கிளை தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். விரிவுரையாளர்கள் அண்ணாமலை, மாரிச்செல்வி, குழல்வாய்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவக்குமார் வரவேற்றார்.

போராட்டத்தில், தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் அனைத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கும் அரசாணை எண் 56-ன் கீழ் பணி வழங்க வேண்டும், பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயம் செய்த ஊதிய நிர்ணயத்தின்படி ஒவ்வொரு கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பணிக்காலம் முழுமைக்குமான நிலுவைத்தொகை வழங்க வேண்டும், மாநில தகுதி தேர்வு உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மவுன மொழி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கவுரவ விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்