ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;

Update:2023-02-01 01:33 IST

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று மாலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாநில செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் குமாரவேல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனில் ஒப்பந்தகாரராக பதிவு செய்துள்ள நபர் அங்கு பணியாற்றும் அலுவலர்களை மிரட்டியும், தாக்கவும் முயற்சி செய்து உள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தலைவர் சங்கரகுமார், மகளிர் அணி செயலாளர் யமுனா, பொருளாளர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் சந்திரசேகர், முன்னாள் மாநில நிர்வாகி சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்