அடிமனை பயனாளிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குத்தாலம் அருகே அடிமனை பயனாளிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;
குத்தாலம்:
குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் ஆமருவி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தின் அடிமனையில் குடியிருப்பவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் செயல் அலுவலர் மற்றும் கோவில் நிர்வாகத்தை கண்டித்து, தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில பொருளாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், புதிய வாடகை நிர்ணயிக்க தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரைகள் வெளிவரும் வரை உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த பயனாளிகளை கட்டாயப்படுத்த கூடாது. பல தலைமுறைகளாக அடிமனைகளில் வீடுகள், சிறு கடைகள் கட்டி பயன்படுத்தியவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரில் இடத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.