கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Update: 2023-03-10 18:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனவர் பாலசந்தர், வனச்சரகர் சந்தோஷ் உள்ளிட்ட வனத்துறையினர் கல்வராயன்மலையில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அருவங்காடு வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைபார்த்த வனத்துறையினர், பேரலில் இருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சாராயம் காய்ச்சிய நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்