தோரணமலையில் பக்தர்கள் கிரிவலம்

கடையம் அருகே தோரணமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.;

Update:2023-07-04 00:15 IST

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் தோரணமலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.

அதன்படி நேற்று அதிகாலையிலேயே பக்தர்கள் ஆனைமுக வடிவம் கொண்ட மலையை சுற்றியுள்ள சுமார் 7 கிலோமீட்டர் தூரம் உள்ள கிரிவல பாதையில் கிரிவலம் சென்றனர். அதனை தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பு மழை செழிக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களோடு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. கிரிவலம் மற்றும் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்