காவடி எடுத்து பக்தர்கள் பாதயாத்திரை

காவடி எடுத்து பக்தர்கள் பாதயாத்திரை;

Update:2023-05-13 00:15 IST

நெகமம்

செட்டியக்காபாளையம் கிராமத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து ஆண்டுதோறும் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பழனிக்கு பாதயாத்திரை சென்றனர். முன்னதாக பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து காவடிகள் முத்தரித்து, அலங்கரிக்கப்பட்டன. பின்னர் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோவிலை சுற்றி வலம் வந்து, ஊரின் முக்கிய வீதிகளில் மேள-தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர். மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில், பட்டத்தரசி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் பக்தர்களின் காவடியாட்டம் நடந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கி, காவடிகளுடன் பழனிக்கு பாதயாத்திரை சென்றனர். இதில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்