தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், முதுகுளத்தூர்.
பக்தர்கள் சிரமம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவில் வாசலில் சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். எனவே நிழல் கூரை அமைத்து பக்தர்களின் சிரமத்தை போக்க அதிகாரகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மாரிமுத்து, ராமநாதபுரம்.
நோய் பரவும் அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் கொத்தங்குளத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையம் உள்ளது. வாலிநோக்கம் விலக்குபாலத்தின் அருகே உள்ள குடிநீர் குழாயின் ஏர்வால்வு திறந்தநிலையில் உள்ளதால் குடிநீர் மாசடைந்து நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே இதனை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிக்கல்.
பாலம் பணி விரைந்து முடிக்கப்படுமா?
ராமநாதபுரம் நகரில் ரெயில் நிலையம் அருகில் உள்ள திருப்புல்லாணி செல்லும் பிரதான சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால வேலைகள் கடந்த ஐந்து வருடங்களாக இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இ.சி.ஆர். ரோடு வழியாக சுற்றி செல்லவேண்டி உள்ளது. எனவே பால வேலைகளை விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றிய பகுதிகளுக்கு இணையம் மற்றும் டெலிபோன் கேபிள்கள் மின்கம்பங்கள் மூலமாக கொண்டுசெல்லப்படுகிறது. இதில் கீழக்கிடாரம் முக்குரோடு பகுதி சாலைகளில் சில இடங்களில் கேபிள்கள் அறுந்து சாலையில் கிடக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கேபிள்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முனியசாமி, காவாகுளம்.