வேளாண்மை இயக்குனர் ஆய்வு
கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.;
தேனி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விற்பனை கூடங்கள் மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்கள் குறித்து மாநில வேளாண்மைத் துறை இயக்குனர் அண்ணாத்துரை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் நேற்று, கம்பத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அவர் ஆய்வு செய்தார். அப்போது தேசிய வேளாண் சந்தை செயல்பாடுகள் குறித்தும், நெல் அறுவடைக்குப்பின் செய்யவேண்டிய தொழில்நுட்பங்கள், தானியங்கள் சேமிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் வேளாண்மை திட்டத்தின் முதன்மை பதப்படுத்தும் நிலையங்களை அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) பால்ராஜ், தேனி விற்பனைக்குழு செயலாளர் ஆறுமுகராஜன், கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.