காஞ்சீபுரத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி

காஞ்சீபுரத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-08-03 09:54 GMT

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, பயனாளிகளுக்கு ரூ.182.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 41 லட்சம் மதிப்பீட்டில் மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்களும், 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2½ லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், கல்வி துறை சார்பில், சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 4 பள்ளிகளுக்கு ரூ.2½ இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு பரிசளிப்பு தொகைக்கான காசோலையையும், கூட்டுறவுத் துறை சார்பில் 5 மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு ரூ.70.06 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கடன்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு ரூ.107.16 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு வங்கி கடன் இணைப்பு திட்டத்திற்கான நல திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீ்பெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாநகராட்சி மேயர் எம். மகாலட்சுமி யுவராஜ், காஞ்சீபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழுத்தலைவர் எஸ்.டி.கருணாநிதி, மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்