செவிலியரிடம் தகராறு; தொழிலாளி கைது

கடையநல்லூர் அருகே செவிலியரிடம் தகராறு செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-06-29 00:15 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே மேலகடையநல்லூர் கள்ளகநாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சுரேஷ் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவர் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் செவிலியர் ஒருவரிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து செவிலியர் கொடுத்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்