தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம்

விக்கிரமசிங்கபுரத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது.

Update: 2022-08-09 19:46 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் நகர தி.மு.க. சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது. விக்கிரமசிங்கபுரம் நகர தி.மு.க. செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். நகர இளைஞர் அணி அமைப்பாளர் செல்வசுரேஷ் பெருமாள் வரவேற்றார்.

கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு, தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து பேசினார். நெல்லை மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், அம்பை ஒன்றிய செயலாளர் பரணிசேகர், சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன், அம்பை நகர செயலாளர் பிரபாகரன், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி துணைத்தலைவர் திலகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்