தி.மு.க. கட்சி கொடியேற்று விழா
சங்கரன்கோவிலில் தி.மு.க. கட்சி கொடியேற்று விழா நடந்தது.;
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை மாவட்ட செயலாளர் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், இளைஞர் அணி சரவணன், கேபிள் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.