சமூக வலைத்தளங்களை நம்பி ஏமாற வேண்டாம்

தேனி மாவட்டத்தில் இருந்து வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் சமூக வலைத்தளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-23 19:00 GMT

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மத்திய அரசின் பகுதி பெற்ற முகவர்களை அணுகி, விசா, என்ன பணி?, முறையான பணி ஒப்பந்தம் ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். போலி முகவர்கள் ஆன்லைன் மூலமாக ஏமாற்றுகின்றனர். எனவே, சமூக வலைத்தளங்களில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். சுற்றுலா விசா, பார்வையாளர் விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பணிகள் குறித்த விவரங்கள் தெரியாவிட்டால் தமிழக அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பணி செய்யப்போகும் நிறுவனத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்