போதை பொருள் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
திருத்துறைப்பூண்டியில்போதை பொருள் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
திருத்துறைப்பூண்டி:
கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீஸ் துறையின் சார்பில் மினி மாரத்தான் போட்டி திருத்துறைப்பூண்டியில் நடந்தது. இந்த போட்டியை திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு ஓடினர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேலூர் வரை போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 5 பேருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்.