வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு

வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்ந்தது.

Update: 2022-11-05 19:20 GMT

நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வாரம் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.80-க்கும், ரோஜா ரூ.150-க்கும், முல்லை ரூ.400-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் குண்டு மல்லி கிலோ ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும், அரளி ரூ.250-க்கும், ரோஜா ரூ.250-க்கும் முல்லை ரூ.1,000-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும் விற்பனையானது. பூக்களின் வரத்து குறைவால் விலை‌ உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்