துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

திருமால்பூரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2022-06-12 22:48 IST

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூரில் மகாபாரத சொற்பொழிவு விழா கடந்த மே மாதம் 25-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தது. அதில் பகலில் மகாபாரத சொற்பொழிவும், இரவில் வில் வளைப்பு, ராஜ சுய யாகம், பகடை துயில், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது உள்ளிட்ட கட்டை கூத்து நாடகமும் நடந்தது. இறுதி நாள் காலையில் துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடந்தது.

விழாவில் திருமால்பூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், மருத்துவத்துறையினர் மற்றும் மின்வாரியத்துறையினர் பங்கேற்று தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்