மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
சீர்காழியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது;
சீர்காழி, செப்.20-
சீர்காழி மின் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை என்ஜினீயர் ரவி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், மாதானம், அரசூர், பூம்புகார், மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி, ஆக்கூர், திருக்கடையூர், கிடாரம் கொண்டான், திருவெண்காடு ஆகிய பிரிவு அலுவலகத்தை சார்ந்த பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலினை செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்தார்.