கோவை
கோவை அருகே உள்ள ஆர்.ஜி.புதூர் பிரிவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 82). இவருக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் மூச்சுவிட திணறியதால் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.
இருந்தபோதிலும் முழுமையாக குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சண்முகம் சாணி பவுடரை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
----
Reporter : J.JOSEPH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore