குட்டையில் தவறி விழுந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி

குட்டையில் தவறி விழுந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.;

Update:2022-09-04 19:02 IST

அரியானா மாநிலம், சண்டிகர் பகுதியை சேர்ந்தவர் குணல் கபூர் (வயது 21). இவர் வேலூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்களுடன் வேலூர் மாவட்டம், திருவலத்தை அடுத்த கரிகிரி பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குட்டையில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்