நவீன மறு நில அளவை திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்

விரைந்து பட்டா வழங்க மாவட்ட அளவில் நவீன மறு நில அளவை திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிய மாநில செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Update: 2023-08-26 19:22 GMT


விரைந்து பட்டா வழங்க மாவட்ட அளவில் நவீன மறு நில அளவை திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிய மாநில செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மாநில செயற்குழு கூட்டம்

விருதுநகரில் தனியார் திருமண அரங்கில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றியத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ராஜா சங்க கொடி ஏற்றினார். மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை கூடுதல் இயக்குனர் கண்ணபிரான், மண்டல துணை இயக்குனர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விருதுநகர் மாவட்ட தலைவர் மாரிமுத்து வரவேற்றார். கூட்டத்தில் மாநில பொருளாளர் ஸ்டான்லி வரவு, செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொதுச் செயலாளர் அண்ணா குபேரன் கடந்த கால நடவடிக்கை குறித்து பேசினார்.

விரைந்து பட்டா

கூட்டத்தில் சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார். களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும். நில அளவை தொழில்நுட்ப பணியினை மேற்கொள்ளும் துணை ஆய்வாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.களப்பணியாற்றுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நில உடமைதாரர்களுக்கு விரைந்து பட்டா வழங்க மாவட்ட அளவில் தனி உதவி இயக்குனர் தலைமையில் நவீன மறு நில அளவை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்