மதுபோதையில் அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவரால் பரபரப்பு

மதுபோதையில் அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-06-02 01:24 IST

பணகுடி:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நெல்லை மாவட்டம் பாபநாசத்துக்கு நேற்று முன்தினம் இரவில் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் பணகுடி அருகில் சென்றபோது தாறுமாறாக ஓடியது. இதுகுறித்து பஸ் டிரைவரிடம் பயணிகள் கேட்டபோது, அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயணிகள், பணகுடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த பஸ்சின் டிரைவரை பரிசோதனைக்காக பணகுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாற்று டிரைவர் அந்த பஸ்சை பாபநாசத்துக்கு ஓட்டிச் சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்