விஷவண்டுகள் அழிப்பு

எட்டயபுரம் அருகே மரத்தில் கூடுகட்டி இருந்த விஷவண்டுகளை தீயணைப்பு துறையினர் அழித்தனர்.;

Update:2022-07-08 16:56 IST

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள சின்னமலைக்குன்று கிராமத்திலுள்ள பொன்னும்கருப்பசாமி கோவில் அருகே வாகை மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விஷவண்டுகள் கூடு கட்டி இருந்தன. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆகியோரை விஷ வண்டுகள் ெகாட்டி வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவில்பட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்று வாகைமரத்தில் இருந்த விஷ வண்டுகளை அழித்து கூட்டை அகற்றினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்