ஓடும் ஆட்டோவில் பயணியிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு

ேசலத்தில் ஓடும் ஆட்டோவில் பயணியிடம் கத்திமுனையில் பணம் பறித்த வழக்கில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-01-05 19:15 GMT

சூரமங்கலம்:-

ேசலத்தில் ஓடும் ஆட்டோவில் பயணியிடம் கத்திமுனையில் பணம் பறித்த வழக்கில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆட்டோ பயணி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). இவர் சொந்த வேலை காரணமாக சேலம் வந்திருந்தார். பின்னர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார்.

அதே ஆட்டோவில் மற்றொருவரும் பயணம் செய்தார். அந்த நபர் ஆட்டோ 5 ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கத்தியை காட்டி ரமேசை மிரட்டினார். மேலும் அவரிடம் பணம், செல்போனை கேட்டார். இதைப்பார்த்து ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

பணம் பறிப்பு

தொடர்ந்து அந்த நபர், கண்இமைக்கும் நேரத்தில் கத்திமுனையில் ரமேசிடம் இருந்த ரூ.9 ஆயிரத்து 500 மற்றும் ெசல்போனை பறித்துக்கொண்டு, ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்தும் தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து ரமேஷ் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசிடம் பணம் பறித்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த பணம் பறிப்பு வழக்கில் ஆட்டோ டிரைவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் அவரையும் ேதடி வருகிறார்கள். ஓடும் ஆட்டோவில் பயணியிடம் கத்திமுனையில் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்