விவசாயி விஷம் குடித்து தற்கொலை

நெல்லையில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-06-29 01:59 IST

நெல்லை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 75). விவசாயியான இவருக்கு மூட்டுவலி பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 24-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பையா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்